கடையநல்லூரில் கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 5 வயது குழந்தை பலி

மாணவர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் எதிர்பாராதவிதமாக இஷாந்த் தவறி விழுந்தான்.படுகாயமடைந்த இஷாந்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடையநல்லூரில் கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 5 வயது குழந்தை பலி
Published on

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவை சேர்ந்தவர் சிவன்மாரி. இவர் ஏழை மாணவர்களும் ராணுவத்தில் சேருவதற்காக கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் இலவச ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

கடந்த 3-ந்தேதி சிவன்மாரி மனைவி கலா, மகன்கள் முகேஷ் (8) மற்றும் இஷாந்த் (5) ஆகியோர் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றிருந்தனர்.

அப்போது அங்கு தனியாக விளையாடிக் கொண்டிருந்த இஷாந்த் அங்குள்ள மாணவர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். இதில் படுகாயமடைந்த இஷாந்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த இஷாந்த் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com