

பல்லடம்:
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் பல்லடம் மற்றும் வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகள், குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கரைப்புதூர், சின்னக்கரையில் உள்ள குடோன்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட 70 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் வெள்ளகோவில், முத்தூர், புதுப்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 390 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வின் அடிப்படையில், புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் எங்கிருந்து, யார் மூலம் வாங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.