ஊத்துக்கோட்டை பகுதியில் 400 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகின- விவசாயிகள் வேதனை

ஊத்துக்கோட்டை பகுதியில் முழுவதுமாக அழுகி சேதமடைந்த நெற்பயிருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்பயிர்கள் சேதம்
நெற்பயிர்கள் சேதம்
Published on

ஊத்துக்கோட்டை:

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட 2 காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித்துர்த்தது.

ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான பால் ரெட்டிகண்டிகை, பாலவாக்கம், லட்சிவாக்கம், பேரன்டூர், பனப்பாக்கம், சென்னங்காரணி, சூளைமேனி, தண்டலம், காக்வாக்கம், போந்தவாக்கம், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், மாலந்தூர், கலவை, நந்திமங்கலம், மேலகரமனூர், பெரிஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மழை விட்டும் இன்னும் வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியவில்லை. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த 400 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் முழுவதும் அழுகி சேதமடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முழுவதுமாக அழுகி சேதமடைந்த நெற்பயிருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே வேளாண்துறை அலுவலர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் சேதமடைந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com