தேனி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 38 பவுன் நகை, பணம் கொள்ளை

அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தேனி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 38 பவுன் நகை, பணம் கொள்ளை
Published on

தேனி:

தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(63). இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.

பீரோவில் பார்த்தபோது 31 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). இவர் வெல்லம் வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மகனும், மகளும் வெளிநாட்டில் உள்ளனர். ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று அழகாபுரிக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6.5 பவுன் தங்கநகை, 350 கிராம் வெள்ளிபொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்தும் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com