நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3½ பவுன் நகை பறிப்பு

நாகர்கோவிலில் இன்று காலை ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3½ பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

நாகர்கோவில்:

கருங்கலை அடுத்த மங்கலகுன்று, தொழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி சொர்ணம் (வயது 72).

இவர் புல்லுவிளையில் உள்ள மகள் வீட்டுக்கு வந்துவிட்டு இன்று காலை, தொழிச்சலுக்கு புறப்பட்டார்.

நாகர்கோவிலில் இருந்து கீழ்குளம் செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். டெரிக் சந்திப்பில் பஸ் சென்ற போது, சொர்ணம் கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பெண் ஒருவர் பறித்தார்.

உடனே சொர்ணம் கூச்சலிட்டார். பஸ்சில் இருந்த பயணிகள், நகை பறித்த பெண்ணை பிடித்தனர். பின்னர் பஸ்சை நிறுத்தி நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பயணிகள் பிடித்து வைத்திருந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

இதில் அவர் சேலம், காக்காதோப்பு பகுதியை சேர்ந்த முத்துமாரி (22) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கைதான பெண்ணுடன் மேலும் யாராவது வந்தார்களா? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வரு கிறது.

நாகர்கோவில் பார்வதிபுரம் பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் வில்லியம். (73). இவர் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு ஆலயத்துக்கு சென்றார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.3½ லட்சம் பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி அவர் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வில்லியம் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்த நபர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com