ஓசூரில் இருந்து மதுரைக்கு கடத்த முயன்ற 270 கிலோ குட்கா பறிமுதல்- வாலிபர் கைது

மின்னல் வேகத்தில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 270 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடமாமந்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர்.
ஓசூரில் இருந்து மதுரைக்கு கடத்த முயன்ற 270 கிலோ குட்கா பறிமுதல்- வாலிபர் கைது
Published on

திண்டுக்கல்:

ஓசூரில் இருந்து மதுரைக்கு காரில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொடைரோடு டோல்கேட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் தாவூது தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது மின்னல் வேகத்தில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 270 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கொண்டு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடமாமந்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (29) என்பவரை கைது செய்தனர்.

குட்கா பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கார் உரிமையாளரான ஓசூரைச் சேர்ந்த சகாதேவன் குட்கா உரிமையாளரான ஓசூரைச் சேர்ந்த ஹரீஸ் பாபு ஆகியோர் மீதும் அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த குட்கா பொருட்களை மதுரைக்கு எங்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com