விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 250 ஆடுகள் பத்திரமாக மீட்பு

சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் இரவு முழுவதும் கண்மாய் பகுதியிலேயே தவித்து வந்துள்ளார்.விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 250 ஆடுகள் பத்திரமாக மீட்பு
Published on

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நூற்றுக்கணக்கான ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை சக்திவேல் விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அதிகமான மழை பெய்ததால், கண்மாயில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் இரவு முழுவதும் கண்மாய் பகுதியிலேயே தவித்து வந்துள்ளார்.

இதைப்பார்த்த மாவிலோடை கிராமத்தை சேர்ந்த மக்கள், இதுகுறித்து உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சக்திவேலையும், 250 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com