நெற்குன்றத்தில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் பலி

நெற்குன்றத்தில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த 2 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பலியாயினர்.
2 தொழிலாளிகள் பலி
2 தொழிலாளிகள் பலி
Published on

போரூர்:

சென்னை நெற்குன்றம் கடும்பாடி அம்மன் நகரில் சிவகாமி என்பவருக்கு சொந்தமான வீட்டின் முதல் தளத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இங்கு கடந்த மாதம் 25ந்தேதி காலை மேஸ்திரி கோவிந்தராஜ் தலைமையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் சென்ற உயர் மின் அழுத்த கம்பி மீது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டது.

இதில் மேஸ்திரி கோவிந்தராஜ் தொழிலாளர்களான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினோத், முனியன் (35), ஏழுமலை (36) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முனியன், ஏழுமலை ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவிந்தராஜ், வினோத் ஆகியோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் சிவகாமி, காண்ட்ராக்டர் பழனி இருவரும் ஏற்கனவே கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com