பெரம்பூரில் 2 மாத பெண் குழந்தை திடீர் மரணம்

கடந்த 2 மாதத்துக்கு முன்பு எட்டு மாதத்திலேயே குறை பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. மூச்சு திணறல் காரணமாக குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பெரம்பூரில் 2 மாத பெண் குழந்தை திடீர் மரணம்
Published on

கொளத்தூர்:

பெரம்பூர், தில்லை நாயகம் தெருவை சேர்ந்தவர் அக்பர் ஷெரிப். மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அக்பர் ஷெரிப்பின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவருக்கு எட்டு மாதத்திலேயே குறை பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே நேற்று இரவு குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com