காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 19 குற்றவாளிகள் கைது

கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள்.கைதானவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறை மற்றும் புழல் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 19 குற்றவாளிகள் கைது
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் பழைய குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ், வெங்கடேசன், சச்சின், செல்வம், நரேஷ், சபரி, சரவணன், கவுதம், அலெக்ஸ், பிரீத்தி குமார், வல்லரசு, சூர்யா, விக்னேஷ், தினேஷ் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ், விஜயராகவன், தினேஷ் ஆகிய மூன்று பேரும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புட்டா முருகனும் கைது செய்யப்பட்டனர்.

ஒரே நாளில் 19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள். அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறை மற்றும் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com