பொள்ளாச்சியில் தங்கையின் காதலனை கத்தியால் குத்திய 17 வயது சிறுவன்

கத்திக்குத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிஷாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கையை காதலித்த வாலிபரை கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சியில் தங்கையின் காதலனை கத்தியால் குத்திய 17 வயது சிறுவன்
Published on

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சாகுல்.

இவரது மகன் நிஷார் (வயது 25). துணி வியாபாரி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

நிஷார் அடிக்கடி தனது காதலிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி வந்தார். இதனை சிறுமியின் 17 வயது அண்ணன் பார்த்து விட்டார். அவர் சிறுமியை கண்டித்தார். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு தனது சகோதரியிடம் கூறி வந்தார். மேலும் நிஷாரை சந்தித்த அவர் தனது தங்கையுடனான காதலை கைவிடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று நிஷார், ராஜ்நகர் பகுதியில் உள்ள தனது நண்பரான ரமேஷ்குமார் என்பவரது வீட்டிற்கு சென்றார். இதனை சிறுமியின் அண்ணன் பார்த்து விட்டார். தனது தங்கையை பார்ப்பதற்காக தான் நிஷார் வந்துள்ளார் என நினைத்து தகராறு செய்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிறுமியின் அண்ணன் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து நிஷாரின் மார்பு, கை ஆகிய பகுதிகளில் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

கத்திக்குத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிஷாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கையை காதலித்த வாலிபரை கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com