இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை வீசி 16 வயது சிறுமி கடத்தல்- கடலூர் வாலிபர் போக்சோவில் கைது

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஜெகன் கடத்தி சென்று விட்டார். இதற்கு 16 வயது சிறுமியுடன் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ஓல்டு டவுனை சேர்ந்த பெண் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை வீசி 16 வயது சிறுமி கடத்தல்- கடலூர் வாலிபர் போக்சோவில் கைது
Published on

வேலூர்:

வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வேலூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

கடலூர் மாவட்டம் பென்னாடம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (வயது 19) திருப்பூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியை தொடர்பு கொண்டார். இருவரும் அதில் அடிக்கடி தகவல்களை பரிமாறத் தொடங்கினர். நாளடைவில் இது காதலாக மாறியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஜெகன் கடத்தி சென்று விட்டார். இதற்கு 16 வயது சிறுமியுடன் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ஓல்டு டவுனை சேர்ந்த பெண் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதில் சிறுமியை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தனர்.

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

போலீஸ் விசாரணையில் ஜெகன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் ஜெகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com