வடிகஞ்சி கொட்டியதில் உடல் வெந்து சிறுமி உயிரிழப்பு

படுகாயமடைந்து அலறிய அவரை பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வடிகஞ்சி கொட்டியதில் உடல் வெந்து சிறுமி உயிரிழப்பு
Published on

கும்மிடிப்பூண்டியில் அடுப்பில் இருந்து சாதத்தை வடிக்கும் போது வடிகஞ்சி உடலில் கொட்டியதில் வடமாநில சிறுமி பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிதாஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய 16 வயது மகள் நந்தினி கடந்த 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அடுப்பில் இருந்து சாதத்தை வடிக்கும்போது, எதிர்பாராதவிதமாக கொதிக்கும் வடிகஞ்சி அவர் மேல் கொட்டியது. இதில் படுகாயமடைந்து அலறிய அவரை பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் வடமாநில குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com