பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

துரைப்பாக்கத்தில் 14 வயது சிறுமியிடம் சில்மிஷம்: 82 வயது முதியவர் கைது

துரைப்பாக்கத்தில் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

சென்னை:

துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 82). இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 14 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை சில்மிஷத்தில ஈடுபட்டார்.

இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி கண்ணகி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடுவதை அறிந்ததும் முதியவர் பெருமாள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அவரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் பெருமாள் திருநெல்வேலியில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com