கே.கே.நகரில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 11 மாத குழந்தை பலி

குழந்தை சனா ஜாஸ்மின் தனியாக பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது சனா ஜாஸ்மின் மாயமாகி இருந்தாள்.
கே.கே.நகரில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 11 மாத குழந்தை பலி
Published on

போரூர்:

சென்னை கே.கே.நகர் 6-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி. இவரது மனைவி ஜெஸ்லிமா. இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை சனா ஜாஸ்மின் உள்ளது.

நேற்று மாலை ஜெஸ்லிமா சமையல் அறையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். குழந்தை சனா ஜாஸ்மின் தனியாக பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது சனா ஜாஸ்மின் மாயமாகி இருந்தாள்.

வீட்டின் கழிவறைக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் நிரம்பி இருந்த வாளியில் குழந்தை தலை கீழாக விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை சனா ஜாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com