கோத்தகிரியில் தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டி

ஆஷஸ் கிரிக்கெட் அணி நி வீரர் சூர்யா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் பந்து வீச்சாளர் விஜய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கோத்தகிரியில் தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டி
Published on

   கோத்தகிரி,

கோத்தகிரி காந்தி மைதானத்தில் கோடநாடு கிரிக்கெட் கிளப் சார்பில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் கோத்தகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட 50 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் 3-வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோத்தகிரி ஆஷஸ் கிரிக்கெட் அணியும், ஈளாடா சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஷஸ் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19 ஓவர்கள் மட்டும் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் சூர்யா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களம் இறங்கிய சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணி வீரர்கள் மணிகண்டன் 36 ரன்கள், பாக்யராஜ் 30 ரன்கள் மற்றும் ராகுல் 28 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி காலிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் பந்து வீச்சாளர் விஜய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com