சுவாமிநாத சாமி திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்

பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலா நடைபெற்றது.திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி பவானி வருகிறது.
சுவாமிநாத சாமி திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்
Published on

சுவாமிமலை:

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீரான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ.28-ம்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மறுநாள் நவ.29 அன்று முதல் 1-ம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. ஒரு நிமிஷம் அதனை தொடர்ந்து டிச.2-ம்தேதி அன்று காலை சுவாமி படிச்சிட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலா நடைபெற்றது. மறுநாள் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று 6-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி பவானி வருகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கும்பகோணம் டி.எஸ்.பி. அசோகன் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் சிவா செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியை செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com