நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கைதான சர்வேயர் சஸ்பெண்டு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.
நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கைதான சர்வேயர் சஸ்பெண்டு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணே சன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நி லத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வைத்தீஸ்கு மாரை மேலம் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com