அரசு பள்ளிகளுக்கு மேஜை- நாற்காலி வழங்கல்

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி வழங்கப்பட்டது.மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி மற்றும் பீரோ ஆகியவற்றை வழங்கினார்.
அரசு பள்ளிக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மேஜை, நாற்காலிகளை வழங்கினர்.
அரசு பள்ளிக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மேஜை, நாற்காலிகளை வழங்கினர்.
Published on

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுநிதியில் இருந்து மாணவர்களுக்கான மேஜை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வடக்குமாங்குடி, சித்தர்காடு, அரசு நலப்பள்ளிகள், கொத்தங்குடி, சாலியமங்களம், அம்மாபேட்டை உள்பட 11 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மேஜை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கலைச்செல்வன், துணைத்தலைவர் தங்கமணி, சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி மற்றும் பீரோ ஆகியவற்றை வழங்கினார்.

அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, வடக்குமாங்குடி ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ், மாவட்ட கவுன்சிலர் ராதிகா, பள்ளி தலைமை ஆசிரியர் சுசிலா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அதேபோல் கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் இரா.பழனி முன்னிலை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா அனைவரையும் வரவேற்றார்.

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாணவர்களுக்கான மேஜை நாற்காலிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் பஞ்சாமி, ஆசிரியர் முருகன், ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com