மயிலாடுதுறையில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆரோக்கிய–நாதபுரத்தில் திறக்கப்பட்டது.மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தனர்.
ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆரோக்கிய–நாதபுரத்தில் திறக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தனர். கூடுதல் ேபாலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வரவேற்றார்.

தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, டி.எஸ்.பி. வசந்தராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் சிவக்குமார், 30-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் விஜய், 35-வது வார்டு கார்த்திக், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com