வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு

போலீஸ் நிலையம் மற்றும் அதன் வளாகம் சுகாதாரமாக இருக்கிறதா என்றும் பார்வையிட்டார். நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்து வழக்குகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்
வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆய்வு செய்தார்.
வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆய்வு செய்தார்.
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலக கோப்புகள் மற்றும் பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் போலீஸ் நிலையம் மற்றும் அதன் வளாகம் சுகாதாரமாக இருக்கிறதா என்றும் பார்வையிட்டார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்து வழக்குகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார். ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com