இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து முழு ஊரடங்கு: போலீஸ் கட்டுப்பாட்டில் 31 மணி நேரம்

இரவு நேர ஊரடங்குடன் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கையும் சேர்த்து 31 மணி நேரம் தமிழக மக்கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
அபராதம்
அபராதம்
Published on

சென்னை:

தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரவு நேர ஊரடங்கு நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த வகையில் நேற்று இரவு 10 மணியில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அந்த ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் முடிந்த நிலையில் முழு ஊரடங்கு தொடங்கியது. நாளை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதன்மூலம் 31 மணி நேரம் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இன்று இரவு பலப்படுத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே நாளை காலை 5 மணிவரையில் அமல்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கை மதித்து பொது மக்கள் வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com