பேராவூரணி பகுதியில் கோடை மழை

காற்றுடன் கோடை மழை ஒரு மணி நேரம் பெய்தது. மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
பேராவூரணி பகுதியில் கோடை மழை
Published on

பேராவூரணி:

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்தது. கடந்த வாரம் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் பகுதி மற்றும் கொன்றைக்காடு, ஒட்டங்காடு, படப்ப னார்வயல், மணக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. பேராவூரணியில் பதிவான மழை விபரம்:பேராவூரணி 10 மி.மீ, ஈச்சன்விடுதி 26 மி.மீ, ஆயிங்குடி 34.2 மி.மீ, நாகுடி 26 மி.மீ.

X

Maalai Malar
www.maalaimalar.com