களக்காட்டில் கோடை மழை- தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கோடை வெயிலால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது.மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது.
களக்காடு தலையணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதை படத்தில் காணலாம்.
களக்காடு தலையணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதை படத்தில் காணலாம்.
Published on

களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் கொளுத்தி வந்ததால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

நேற்று இரவில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது. இதனால் தலையணை நீர்வீழ்ச்சியில் இன்று அதிகாலை முதலே தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் குளிக்கும்படி வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com