என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கசிவால்  தீயில் நாசமான கரும்பு தோட்டம்
    X

    மின் கசிவால் தீயில் நாசமான கரும்பு தோட்டம்

    • தீ பற்றி எரிந்து சுமார் 2 ஏக்கர் பரப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.
    • பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடத்தூர்,

    கடத்தூர் அருகே உள்ள வெங்கடதாரள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சம்பத். இவருக்கு சொந்தமாக எட்டு ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

    இதில் இரண்டு ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். வெட்டுவதற்கு கரும்புகள் தயாராக இருந்த நிலையில் ஆலையில் இருந்து அனுமதி வராத நிலையில் வெட்டுவதற்காக காத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்ததில் கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிந்து சுமார் 2 ஏக்கர் பரப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது. இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து கடத்தூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி துவங்கியுள்ளதால் கரும்பு பயிர்களில் தீப்பற்றி எரிந்து வருவது அதிகரித்துள்ளது.

    எனவே இவற்றை தடுக்க மின்சாரத் துறையினர் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×