கோயம்பேட்டில் பஸ்சுக்கு காத்திருந்த துணை தாசில்தார் 'திடீர்' மரணம்

தர்மபுரி செல்வதற்காக நேற்று இரவு கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் வந்து பஸ்சுக்காக காத்திருந்தார்.போலீசார் சதாசிவத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோயம்பேட்டில் பஸ்சுக்கு காத்திருந்த துணை தாசில்தார் 'திடீர்' மரணம்
Published on

சென்னை:

தர்மபுரி மாவட்டம் வெண்ணம்பட்டி சாலையை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 59). துணை தாசில்தார். இவர் நேற்று காலை அலுவலக வேலையாக சென்னை வந்தார். பின்னர் உயர்நீதிமன்ற பணிகளை முடித்துக் கொண்டு தர்மபுரி செல்வதற்காக நேற்று இரவு கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் வந்து பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது சதாசிவம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது சதாசிவம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் சதாசிவத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com