மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கல்

ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பாலசுப்ரமணியன் விவசாயிக்கு உரத்தை வழங்கினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.
விவசாயிக்கு உரம் வழங்கும் ஆணை
விவசாயிக்கு உரம் வழங்கும் ஆணை
Published on

மதுக்கூர்:

மதுக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதியில் உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குறுவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.2466 -க்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி 25 கிலோ பொட்டாஸ் உரம் வழங்கும் நிகழ்ச்சி ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார். கூட்டுறவு வங்கி தணிக்கை அலுவலர் பாண்டியன் கலந்து கொண்டு ஆலம் பள்ளம் விவசாயிக்கு உரம் வழங்கும் ஆணையை வழங்கினார். ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பாலசுப்ரமணியன் விவசாயிக்கு உரத்தை வழங்கினார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் இளஞ்சியம் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com