பாப்பாரப்பட்டி அருகே சுப்பிரமணியசாமி திருக்கல்யாண நிகழ்ச்சி

100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுப்பிரமணி சாமி கோவில் அமைந்துள்ளது.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பாப்பாரப்பட்டி அருகே சுப்பிரமணியசாமி திருக்கல்யாண நிகழ்ச்சி
Published on

பாப்பாரப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுப்பிரமணி சாமி கோவில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் சுப்பிரமணியர் சாமிக்கும் வள்ளி மற்றும் தெய்வானை சாமிக்கும் திருக்கல்யாணம் தைப்பூச நன்னாளில் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி மற்றும் தெய்வானை சாமிக்கும் சீர்வரிசை அழைப்பு மற்றும் பெண் வீட்டார் அழைப்பும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வள்ளி மற்றும் தெய்வானை கழுத்தில் தாலி கட்டினார். மேலும் சாமிக்கு மொய் வழங்கி னர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com