திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் சேர்க்கை

மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்தனர்.
 வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்த போது எடுத்தப்படம்.
 வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்த போது எடுத்தப்படம்.
Published on

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று நடைபெற்றது. மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., மாணவர்களுக்கு வடிவங்கள், நிறங்கள், எண்கள், தமிழ், ஆங்கில எழுத்து அட்டைகள், பழங்கள், காய்கறிகளின் மாதிரிகள் போன்றவற்றை கொண்டு அறிவுத்திறன் சோதித்து அறியப்பட்டது.

யு.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புவாரியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் உள்ளடக்கிய வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடப்பட்டது. தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்த பின்னர் மனநிறைவுடன் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com