போதை ஊசி விற்றால் கடும் நடவடிக்கைதிண்டிவனம் டி.எஸ்.பி. எச்சரிக்கை

தனி படை போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்சூர்யா மற்றும் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த பொற்செல்வன் ஆகியோர் போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட சூர்யா, பொற்செல்வன்.
கைது செய்யப்பட்ட சூர்யா, பொற்செல்வன்.
Published on

 விழுப்புரம்:

திண்டிவனத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போதை ஊசி,போதை மாத்திரை பயன்படுத்துவதாகவும் விற்பனையில் ஈடுபடுவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் போதை மாத்திரைகளை பயன்படுத்துவர்கள் மற்றும் விற்பவர்களை ரகசிய தகவலின் பேரில் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம் சின்ன முதலி தெருவில் சூர்யா என்பவர் வீட்டில் போதை மாத்திரை விற்பனை செய்வதாகவும் மற்றும் பயன்படுத்தி வருவதாகவும் சுடி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனி படை போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சூர்யா மற்றும் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த பொற்செல்வன் ஆகியோர் போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.அவர்களை பிடிக்க முற்பட்டபோது பொற்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி அருகே உள்ள வீட்டில் மறைந்து கொண்டான் .  ஆனாலும் போலீசார் அவனை மடக்கி பிடித்தனர். பொற்செல்வன் மற்றும் சூர்யாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்த போதை மாத்திரை ,போதை ஊசியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் கூறும் போது, திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தினாலோ, விற்றாலோ,அதற்கு துணை போனாலும் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை தெரிவித்தால் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com