குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை

சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் பதவி ஏற்றார்
போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் பதவி ஏற்றார்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் நேற்று பதவி ஏற்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டம், விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கும் மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் நடப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும்.

பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்க 9363495720 இந்த தொலைபேசியின் மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் புகார் தெரிவிப்பவரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com