சாத்தான்குளம்-முதலூர் சாலையில் தெருவிளக்குகள் சீராக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

முதலூர் சாலை, தோப்புவளம் சாலை மற்றும் நாடார் தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் முறையாக எரிவது இல்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சாத்தான்குளம்-முதலூர் சாலையில் தெருவிளக்குகள் சீராக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட 14 மற்றும் 15-வது வார்டு பகுதியில் உள்ள முதலூர் சாலை, தோப்புவளம்சாலை மற்றும் தச்சமொழி நாடார் தெருக்களில் அமைக்கப்படடுள்ள தெரு விளக்குகளில் மின்விநியோகம் செய்யும் வகையில் தோப்புவளம் சாலையில் மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் முதலூர் சாலை, தோப்புவளம் சாலை மற்றும் நாடார் தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் முறையாக எரிவது இல்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, பல நேரங்களில் இரவில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் முழ்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தோப்புவளம் சாலையில் உள்ள மின்வயரில் மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் சீராக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com