கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கொடியேற்றம்

கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு இருதயகுளம் பங்குதந்தை பாக்கிய செல்வன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து 12 நாட்கள் திருப்பலி நிகழ்ச்சி புனித அந்தோனியார் ஆலய திருத்தலத்தில் நடைபெறுகிறது.

வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் பாளை மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைராஜ் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.

14-ந் தேதி பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோனி சாமி தலைமையில் திருப்பலி திருவிழா நடைபெறுகிறது.

அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com