சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் - ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் சின்னக் கோவிலாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான பயிற்சிக்காக மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியபோது எடுத்த படம்.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியபோது எடுத்த படம்.
Published on

சங்கரன்கோவில்:

மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் சின்னக் கோவிலாங்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சர் கோப்பை போட்டி களுக்கான பயிற்சிக்காக மாணவ, மாணவிகளுக்கு விளை யாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தி.மு.க. ஒன்றிய செய லாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வெள்ளத் துரைபாண்டியன் முன்னிலை வகித்தார்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், திருமலைகுமார், மகேந்திரன், முகேஷ், கிளை செயலாளர் செந்தில்குமார், சுபாஷ்சந்திரபோஸ், ஒன்றிய பிரதிநிதி சுதா, பால்பாண்டியன், ராமசுப்பு, மகேந்திரன் அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com