காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
Published on

திருவாரூர்:

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம், வடைமாலை சாற்றப்பட்டிருந்தது.

பின்னர் பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கும், நரிக்குடி எமனேஸ்வரர்கோவிலில் உள்ள பைரவருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது

X

Maalai Malar
www.maalaimalar.com