ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிவன் கோவில்களில் குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.
ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

திருவாரூர்:

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.

உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com