ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ெதாடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

திருவாரூர்:

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ெதாடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.

பின்னர் உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com