கீழசெக்காரக்குடியில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

முகாமை மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகராஜா தொடங்கி வைத்தார். முகாமில் 4 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முகாம் நடந்தபோது எடுத்த படம்.
முகாம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

செய்துங்கநல்லூர்:

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு தனியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கீழசெக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

இதனை மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகராஜா தொடங்கி வைத்தார். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன் வரவேற்று பேசினார்.

இதில் 23 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 4 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், இருட்டறை உதவியாளர் எட்டையா, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, அரி பால கிருஷ்ணன், அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் கணேசன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவினர் செய்திருந்தார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com