தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர் தேரடி வீதியில் உள்ள காலபைரவர், கோப்பணம் பாளையத்தில் உள்ள காலபைரவர், நன்செய் இடையாறில் உள்ள மகா காலபைரவர் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் இருந்தபோது எடுத்த படம்.
பரமத்திவேலூர் தேரடி வீதியில் உள்ள காலபைரவர், கோப்பணம் பாளையத்தில் உள்ள காலபைரவர், நன்செய் இடையாறில் உள்ள மகா காலபைரவர் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் இருந்தபோது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் பாண்ட–மங்கலம் புதிய காசி விஸ்வ–நாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில் , பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஈஸ்வரன் கோவில்–களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com