

திண்டுக்கல்:
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டியில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் முருகனுக்கு பாலபிசேகம் செய்து வேல் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். அதிகாலை முதல் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்
.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு பழனி மூலவரை போல ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல அசோக்நகர் முருகன் கோவில் ஆர்.வி.நகர், கந்தகோட்டம் கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அபிராமி அம்மன் கோவில் சன்னதியிலுள்ள வள்ளிதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.