நட்டாத்தி ஊராட்சியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்

நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டது.
முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.இதில் தோல் கழலை நோய் விழிப்புணர்வு முகாமிற்கு நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார்.நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து‌ராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் ஜோசப்ராஜ், கால்நடை உதவி மருத்துவர் வேல்மாணிக்க வள்ளி, கால்நடை ஆய்வாளர்கள் சாந்தி சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் கோமதி லெட் சுமி, பேச்சியம்மை, டி.வி.எஸ். தொண்டு நிறுவனத்தில் இருந்து செல்வி, வார்டு உறுப்பினர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கால்நடை சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டு சத்துமாவுகள் மாத்திரைகள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிப்பவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் நட்டாத்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கால்நடை வளர்க்கும் மக்கள் கால்நடையுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை செபத்தையாபுரம் கால்நடை மருத்துவமனை ஏற்பாடு செய்து இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com