முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

வருகிற 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.மாவட்டத்தை சார்ந்தவர்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்தும், மனுக்களாக சமர்ப்பித்தும் பயனடையலாம்.
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகிக்கிறார். எனவே, மாவட்டத்தை சார்ந்தவர்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்தும், மனுக்களாக சமர்ப்பித்தும் பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com