சிறப்பு கிராமசபை கூட்டம்

75 மரக்கன்றுகள் நட்டு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் விபரங்கள் அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
சிறப்பு கிராமசபை கூட்டம் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.
சிறப்பு கிராமசபை கூட்டம் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.
Published on

அம்மாபேட்டை:

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், கீழகோவில்பத்து ஊரா ட்சியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறப்பு கிரா மசபை கூட்டம் நடைபெ ற்றது. கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நட்டு கலெக்டர் தினே ஷ்பொன்ராஜ்ஆலிவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குஉள்பட ஊராட்சியில் நிறைவே ற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் விபரங்கள் அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், அமானுல்லா உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com