முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமை தாங்கினார்.
முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற காட்சி. 
முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற காட்சி. 
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜ்குமார்,வார்டு உறுப்பினர்கள் மல்லிகா, முருகேஸ்வரி,சொர்ணா, சுப்புலெட்சுமி, தெய்வராணி, அரி கிருஷ்ணன், முத்து கணபதி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலர் சுப்பையா வரவேற்றார். கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பார்வை யாளராக மண்டல துணை வட்ட வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரி கலந்து கொண்டார். சிறப்பு கூட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஊராட்சியில் அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகளான சாலை வசதி, வடிகால், பேவர் பிளாக் சாலை, தார் சாலை மற்றும் தெருவிளக்குகள் பராமரித்தல், வரி வசூலை முழுமையாக வசூலித்தல் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் 2 ஆயிரம் மரங்களை வளர்த்தல் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com