கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவு ள்ளது. தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 26-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவு ள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் பெண் வேலைநாடுநர்கள் 2021, 2022 மற்றும் 2023 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளோமோ தேர்ச்சி பெற்று, 18 முதல் 22 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தகுதியுடைய பெண் வேலைநாடுநர்கள் அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ள பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பயிற்சி காலம் முடிவு பெற்ற பின் நிரந்தர பணிக்கு தேர்வாகும் வாய்ப்பினை பெற முடியும். மேலும், பயிற்சி காலத்தில் 12-ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.12,300 டிப்ளோமா முடித்தவர்களு க்கு ரூ.13,400 மாத ஊதியமும், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com