சிறப்பு தூய்மை பணி இயக்கம்

வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூய்மை இயக்கம் பணிகள் குறித்து மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் பேசினார்.
தூய்மை இயக்கம் பணிகள் குறித்து மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் பேசினார்.
Published on

வல்லம்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் வல்லம் பேரூராட்சியில் பொதுமக்கள் பங்களிப்போடு சிறப்பு தூய்மை பணி இயக்கம் தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் தலைமையில் மேற்கொள்ளபட்டது.

பேரூராட்சி 2-ம் வார்டில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு இந்த சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது . வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

இம்முகாமில் வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் , மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com