தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 01.08.2022 முதல் தொடங்க அரசு உத்தரவிட்டது. அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 17.09.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டத்தில்  வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்
Published on

தென்காசி:

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 01.08.2022 முதல் தொடங்க அரசு உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 17.09.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

அதன்படி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் VHA (Voter Help Line Mobile App), என்ற செயலி மூலமாகவும் இணைக்கலாம். மேலும் https://tenkasi.nic.in/ இணையத்தளத்தின் மூலம் படிவம் -6பி -ஐ பதிவிறக்கம் செய்தும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com