வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
வைகாசி மாத கடைசி பவுர்ணமி முன்னிட்டு பரமத்தி அங்காள பரமேஸ்வரி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
வைகாசி மாத கடைசி பவுர்ணமி முன்னிட்டு பரமத்தி அங்காள பரமேஸ்வரி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன், பாண்டமங்கலம் மகாமாரியம்மன், பகவதி அம்மன், சேளூர் மாரியம்மன்,கொந்தளம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com