திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது.மாணவர்கள் தங்களது வகுப்பறையில் ஆசிரியர்கள் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் "சமூக நீதி நாள்" உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி உறுதி மொழியினை வாசித்தார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, உதவியாளர்கள் சிலுவைரோஸ் மேரி, மதன், மகாலட்சுமி வினிதா மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் தங்களது வகுப்பறையில் ஆசிரியர்கள் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com