தோட்டக்கலைத்துறை மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.பயிற்சியில் கலந்துகொள்ப வர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.140 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
தோட்டக்கலைத்துறை மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
Published on

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டப்பணி யாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அரசு தோட்டக்கலைப் பண்ணை திம்மாபுரம் மற்றும் ஜீனூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. தோட்டம் அமைத்தல், அலங்கார தாவரங்களை கொண்டு நில எழிலூட்டுதல் ஆகிய பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி முடிவின் போது பயிற்சியில் முழுமையாக கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியானது 49 தோட்டப் பணியாளர்களுக்கு 25 நாட்கள் கால அளவை கொண்டு வழங்கிடும்படி திட்ட வழிகாட்டி நெறிமுறை பெறப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி இப்பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

இதில் நிலமற்ற தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், பயிற்சியில் கலந்துகொள்ப வர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.140 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள தேவையான செயல்விளக்க உபகரணங்கள் மற்றும் பயிற்சி பொருட்கள் ஆகியவை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள் ஆதார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை நகல், 8-ம் வகுப்பு கல்வித்தகுதிச் சான்று ஆகிய ஆவணங் களுடன், அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com